மேற்கு லண்டனில் உள்ள செளத்ஆல் பகுதி, தெற்காசியர்கள் அதிகம் வாழும் இடம். இதனால் இந்த பகுதியை உள்ளூர்வாசிகள், "லிட்டில் இந்தியா" என்று அழைக்கிறார்கள்.
லண்டன்,
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள செளத்ஆல் பகுதி, தெற்காசியர்கள் குறிப்பாக பஞ்சாபியர்கள் பெருமளவில் இந்த பகுதியில் வசிக்கிறார்கள்.
இதனால் இந்த பகுதி, "லிட்டில் இந்தியா" என பரவலாக அழைக்கப்படுகிறது. இங்குள்ள சந்தை பகுதிகளில் செல்போன் கடை மற்றும் முடி திருத்தும் கடையில் உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியளவில் வெடிச்சம்பவம் நடந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த வெடி சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வெடிச்சம்பவத்தை தீவிரவாத செயலாக கருதவில்லை என்றும் இது எரிவாயு வெடிப்பால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். வெடிவிபத்தால் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதனால், இடிபாடுகளில் சிக்கியர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு சிறார் மற்றும் 4 பெரியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளுக்குள் யாரேனும் உயிருடன் சிக்கியுள்ளார்களா எனக்கண்டறிய மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
லண்டனில் இருந்து வந்த மேலும் 3 பேருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.