மாநில செய்திகள்

வெங்காயம் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல் + "||" + To control the price of onions The Tamil Nadu government should take appropriate action Vijayakanth insisted

வெங்காயம் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்

வெங்காயம் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்
வெங்காயம் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை, 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டெல்டா மாவட்ட விவசாயிகள் அறுவடை செய்து வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைத்து முளைத்த நிலையில் உள்ளது. கஷ்டப்பட்டு சாகுபடி செய்த விளை பொருட்களுக்கு உரிய மரியாதையோ, உரிய இழப்பீடு தொகையும் கிடைக்காமல் விவசாயிகள் வறுமையில் வாடுவது நிச்சயம் கண்டிக்கத்தக்க ஒன்று. ஆகவே, விவசாயிகளின் விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்வதுடன், நெல் மூட்டைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழகத்தில் தற்போதுள்ள சேமிப்பு கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேவேளை தற்போது தமிழக அரசு வெங்காயத்தின் விலையை 45 ரூபாய்க்கு குறைத்து வினியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்று என்றாலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.