தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் இருந்து 12 லட்சம் டன் ஆப்பிள் கொள்முதல் - மத்திய அரசு அனுமதி + "||" + Purchase of 12 lakh tonnes of apples from Jammu and Kashmir - Central Government approval

ஜம்மு காஷ்மீரில் இருந்து 12 லட்சம் டன் ஆப்பிள் கொள்முதல் - மத்திய அரசு அனுமதி

ஜம்மு காஷ்மீரில் இருந்து 12 லட்சம் டன் ஆப்பிள் கொள்முதல் - மத்திய அரசு அனுமதி
ஜம்மு காஷ்மீரில் இருந்து 12 லட்சம் டன் ஆப்பிள் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
புதுடெல்லி, 

நெல், கோதுமை போன்ற உணவு தானியங்களை விவசாயிகளிடம் இருந்து அரசு எப்படி கொள்முதல் செய்கிறதோ, அதைப்போல ஜம்மு காஷ்மீரில் ஆப்பிள் பழங்களையும் அரசு கொள்முதல் செய்கிறது. 

இதன்படி இந்த சீசனில் (2020-2021) 12 லட்சம் டன் ஆப்பிள் பழங்களை கொள்முதல் செய்வதற்கு மத்திய மந்திரிசபை நேற்று அனுமதி அளித்து உள்ளது. இதற்காக ரூ.2,500 கோடி உத்தரவாத தொகையை பயன்படுத்திக் கொள்ளவும் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

கடந்த சீசனில் என்ன விதிமுறைகளின்படி ஆப்பிள் கொள்முதல் நடந்ததோ, அதே விதிமுறைகளின்படியே இந்த சீசனிலும் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், கொள்முதலில் நஷ்டம் ஏற்பட்டால் அதை மத்திய அரசும், ஜம் முகாஷ்மீர் யூனியன் பிரதேச அரசும் சரிபாதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.