உலக செய்திகள்

சீனாவின் கொரோனா தடுப்பூசியை வாங்க மாட்டோம்- பிரேசில் அதிபர் + "||" + Brazil will not buy China's Sinovac vaccine, says President Jair Bolsonaro

சீனாவின் கொரோனா தடுப்பூசியை வாங்க மாட்டோம்- பிரேசில் அதிபர்

சீனாவின் கொரோனா தடுப்பூசியை வாங்க மாட்டோம்- பிரேசில் அதிபர்
சீனாவின் உகான் நகரில் தான் கொரோனா வைரஸ் முதன் முதலாக கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்டது.
ரியோ டி ஜெனீரா,

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என உலக நாடுகள் எதிர்பார்த்து உள்ளன. உலக அளவில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை மருத்துவ பரிசோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளன. 

வைரசை உலக நாடுகளுக்கு அடையாளம் காட்டிய சீனாவும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. சீனாவின் சினோவேக் என்ற தடுப்பூசியும் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில், சீனாவின் கொரோனா தடுப்பூசியை வாங்கப் போவது இல்லை என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ அறிவித்துள்ளார். 

சமூக வலைத்தளத்தில் ஆதாரவாளர் ஒருவர் சீனாவின் தடுப்பூசியை வாங்க வேண்டாம் என வலியுறுத்திய பதிவுக்கு பதில் அளித்துள்ள பிரேசில் அதிபர், “ நிச்சயமாக சீனாவின் தடுப்பூசியை வாங்க மாட்டோம்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஏப்.14 முதல் 16 வரை தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா அனுசரிக்கப்படும்
ஏப்.14 முதல் 16 வரை தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
2. மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட முகாம்கள் மூடப்பட்டன
மராட்டிய மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 100-க்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்தார்.
3. முக கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் தெலுங்கான முதல்வர் அறிவிப்பு
தெலங்கானாவில் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் முக கவசம் அணியாவிட்டால் 1,000 ருபாய் அபராதம் விதிக்க முதல்வர் சந்திரசேகர்ராவ் உத்தரவிட்டுள்ளார்.
4. நான்கு கோடியே 30 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து இருப்பில் உள்ளது- மத்திய மந்திரி ஹர்ஷவர்தன்
நான்கு கோடியே 30 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து இருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
5. இந்தியாவில் பிற தடுப்பூசிகள் மூலப்பொருள் பற்றாக்குறை பிரச்சினைகளில் சிக்கியுள்ளன
கோவிஷீல்ட், கோவாக்சின் தவிர இந்தியாவில் பிற தடுப்பூசிகள் சோதனைகள் மற்றும் மூலப்பொருள் பற்றாக்குறை ஆகியவற்றில் சிக்கியுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.