உலக செய்திகள்

தைவானை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டாம், மற்ற நாடுகளுக்கு சீனா அழுத்தம் - தைவான் வெளியுறவு அமைச்சர் + "||" + China puts pressure on nations to not recognise Taiwan as a country: Foreign Minister Joseph Wu tells

தைவானை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டாம், மற்ற நாடுகளுக்கு சீனா அழுத்தம் - தைவான் வெளியுறவு அமைச்சர்

தைவானை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டாம், மற்ற நாடுகளுக்கு சீனா அழுத்தம் - தைவான் வெளியுறவு அமைச்சர்
தைவானை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டாம் என்று சீனா மற்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது என்று தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வு கூறி உள்ளார்.
தைபே

சீனா தாக்கினால் அமெரிக்கா தங்களுக்கு உதவிக்கு வரும் என்று நம்புவதாகவும், இதனால்தைவான் தன்னை தற்காத்துக் கொள்ள முடியும் என்று தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வு கூறினார்.

கடந்த சில மாதங்களாகன்  தைவானுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. எந்த நேரத்திலும் சீனா தைவான் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து தைவானின் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வு கூறியதாவது;-

தைவானை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டாம் என்று சீனா மற்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.ஆனால் உலகில் பெரும்பாலான நாடுகள் எங்களுடன் தொடர்பு கொள்கின்றன, மேலும் அவர்கள் என்னை தைவானின் வெளியுறவு அமைச்சராக அங்கீகரிக்கின்றனர். 

தேசிய தினம் தைவானுக்கு மிக முக்கியமான நாள், ஆனால் சீனர்கள் நாங்கள் கொண்டாடுவதைத் தடுக்க உடல் ரீதியான வன்முறையை தூண்டினர். அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

தைவானில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு சீனா தயாராகி வருகிறது. சீனா ஏவுகணைகளை நிலைநிறுத்துவது மட்டுமல்லாமல், அவை தனது நிலம் மற்றும் வான் இராணுவ நடவடிக்கைகளையும் அதிகரித்துள்ளன, இது ஆபத்தான சூழ்நிலை. சீனா தனது நோக்கத்தை மறைக்கவில்லை, நாங்கள் எங்கள் இராணுவ திறன்களையும், பல நாடுகளின் ஆதரவையும் பெறுகிறோம்.

சீனா தைவானை தாக்கினால் அமெரிக்கா தங்களுக்கு உதவிக்கு வரும் என்று நம்புகிறோம்.இதனால் தைவான் தன்னை தற்காத்துக் கொள்ள முடியும்.

சீனாவில் உள்நாட்டுப் பிரச்சினை ஏற்படும் போதெல்லாம், கவனத்தைத் திசைதிருப்ப ஒரு பலிகடாவை தேட அவர்கள் முயற்சிப்பார்கள் என்றும், தைவான் ஒரு எளிதான பலிகடா என்றும், இந்தியாவுடன் நட்பு கொள்ள நாங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஜோசப் வு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா, சீனா இடையே உடன்பாடு
பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.
2. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.82- கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.82- கோடியாக உயர்ந்துள்ளது.
3. மியான்மரின் ஆயுதப்படை தினமான இன்று ஒரே நாளில் போராட்டக்காரர்கள் 91 பேர் சுட்டுக்கொலை
மியான்மரின் ஆயுதப்படை தினமான இன்று ஒரே நாளில் போராட்டக்காரர்கள் 91 பேர் சுட்டுக்கொலை செய்ய்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
4. தைவானில் கோர விபத்து; 2 போர் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கடலில் விழுந்தன; விமானி ஒருவர் உயிரிழப்பு
தைவானின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான பிங்டங் நகரில் இருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான எப்5இ ரக போர் விமானங்கள் 4 வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றன.
5. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 33 சதவீதம் குறைந்துள்ளது
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 33 சதவீதம் குறைந்திருந்தாலும் உலகிலேயே அதிக ஆயுதம் இறக்குமதி செய்யும் 2வது நாடு என்ற பெயரைப் பெற்றுள்ளது.