மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம்பெறும் தொகுதிகள் அறிவிப்பு + "||" + Announcement of constituencies in new districts in Tamil Nadu

தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம்பெறும் தொகுதிகள் அறிவிப்பு

தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம்பெறும் தொகுதிகள் அறிவிப்பு
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது
சென்னை,

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகள்: சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம்: ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. 

திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. 

வேலூர் மாவட்டம்: காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கீழவைத்தியனாங்குப்பம் ஆகிய 5 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. 

ராணிப்பேட்டை மாவட்டம்: அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. 

விழுப்புரம் மாவட்டம்: செஞ்சி, மைலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய 7 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. 

கள்ளக்குறிச்சி மாவட்டம்: உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. 

நெல்லை மாவட்டம்: நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. 

தென்காசி மாவட்டம்: சங்கரன்கோவில்(தனி), வாசுதேவநல்லூர்(தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.  


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியது
தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று புதிதாக 10,941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
3. ஏப்ரல் 18: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,91,451 ஆக அதிகரித்துள்ளது.
4. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று புதிதாக 10,723 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
5. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் - முழு விவரம்
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.