தடுப்பூசி தற்காலிகமானது... கொரோனாவை ஒழிக்க முடியாது -நிபுணர் கருத்து + "||" + ‘Very little chance that it’ll be eradicated’: Senior British scientist raises concern about coronavirus
தடுப்பூசி தற்காலிகமானது... கொரோனாவை ஒழிக்க முடியாது -நிபுணர் கருத்து
கொரோனா தொற்று நிரந்தரமாக மனித சமூகத்தில் இருக்கும் என்றும், ஆனால் தடுப்பூசி ஒரு தற்காலிகத் தீர்வினை வழங்கும் என லண்டன் நிபுணர் கூறி உள்ளார்.
லண்டன்
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பானது 4 கோடியை தாண்டி உள்ளது. கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது என இங்கிலாந்தின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் (SAGE) உறுப்பினர் ஜான் எட்மண்ட் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.70 லட்சத்தினை தாண்டியது. தொற்றுக்கான தடுப்பூசி தயாரிப்பு பணியில் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் எட்மண்ட் கொரோனா தொற்று நிரந்தரமாக மனித சமூகத்தில் இருக்கும் என்றும், ஆனால் தடுப்பூசி ஒரு தற்காலிகத் தீர்வினை வழங்கும் என்றும் கூறியுள்ளார்.
தற்போதைய சூழலில் தொற்று பாதிப்பு வாய்ப்புகள் குறைக்கப்பட வேண்டும் அப்போதுதான் தடுப்பூசியை பரவலாக பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.வெவ்வேறு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் முதலீடு செய்வதில் பிரித்தானியா புத்திசாலித்தனமாக செயல்பட்டு வருவதாகவும், தடுப்பூசி கிடைத்தால் எல்லோருக்கும் உடனடியாக அது சென்று சேரும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆறு வெவ்வேறு கொரோனா தடுப்பூசிகளுக்கான விநியோக ஒப்பந்தங்களில் இங்கிலாந்து கையெழுத்திட்டுள்ளது, நாடு முழுவதும் 44,000க்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கில் இந்திய பணக்காரர்களின் செல்வம் 35 சதவீதம் அதிகரித்துள்ளது; ஆனால் கோடிகணக்கானவர்கள் வேலை இழந்து உள்ளனர் என ஆக்ஸ்பாம் என்கிற லாப நோக்கற்ற அமைப்பு கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்துச் சமத்துவமில்லா வைரஸ் என்னும் பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும், அதை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என அமெரிக்காவின் மருத்துவத் துறை தலைவர் விவேக் மூா்த்தி கூறி உள்ளார்.