உலக செய்திகள்

196 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் குழு + "||" + A group of astronauts returning to Earth after 196 days

196 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் குழு

196 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் குழு
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 196 நாட்களுக்கு பின் கிறிஸ் கேசிடி மற்றும் அவரின் குழுவினர் பூமிக்கு திரும்பியுள்ளனர்.
வாஷிங்டன்,

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் பணிபுரியும் கிறிஸ் கேசிடி மற்றும் அவரின் குழுவினர், கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி விண்வெளிக்குச் சென்று, சர்வதேச விண்வெளி நிலையத்தில் ‘எக்ஸ்பெடிஷன் 63’ எனும் பிரிவில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் விண்வெளியில் இருக்கையில் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின்போது அங்கிருந்து பூமியை எடுக்கப்பட்ட படங்களைப் பகிர்ந்திருந்தனர்.


இந்நிலையில், நாசா விண்வெளி வீரர் கிறிஸ் கேசிடி மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களான இவான் வாக்னர் மற்றும் அனடோலி இவானிஷின் ஆகியோர் 196 நாட்களுக்கு பின் பூமிக்கு திரும்பியுள்ளனர்.

196 நாட்கள் விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றிய அவர்களின் குழுவினர், நேற்று இரவு 7:32 மணிக்கு விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டு, கஜகஸ்தான், டிஜெஸ்கஸ்கன் பகுதியில் இரவு 10:54 மணிக்கு தரையிறங்கினார்கள். அவர்களை அப்பகுதி மக்கள் மற்றும் நாசா ஆய்வுக் குழுவினர் வரவேற்றனர்.