மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு + "||" + Free corona vaccine for everyone in Tamil Nadu

தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்த பின் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அதிக காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன.புதுக்கோட்டையில் நோய்ப்பரவல் குறைந்திருக்கிறது. சுமார் 6 ஆயிரம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக ஸ்டாலின் அரசைப்பற்றி குறை கூறுகிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐடிசி நிறுவன ஆலை தொடங்கப்பட்டு 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. முதலீட்டாளர் மாநாட்டில் எந்த தொழிலும் தமிழகத்திற்கு வரவில்லை என ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார்.

272 ஏரிகள் குடிமராமத்துப் பணிகள் மூலம் தூர்வாரப்பட்டுள்ளன. ரூ. 31 கோடியில் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  வேளாண்சட்டம் விவசாயிகளுக்கு பாதுகாப்பானது.

புதுக்கோட்டையில் 197 கோடி ரூபாய் செலவில் தொழில் தொடங்க முதலீடு செய்துள்ளன.  211 தொழில் நிறுவனங்கள் சுமார் 300 கோடி செலவில் தொழில் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஐடிசி தொழிற்சாலை புதுக்கோட்டையில் செயல்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தவுடன், அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.