உலக செய்திகள்

பாகிஸ்தானில் போலீசாருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதலில் 10 பேர் பலியா? விசாரணை நடத்த ராணுவ தலைமை உத்தரவு + "||" + Clashes took place between the Karachi Police & Pakistan Army Army chief Bajwa orders probe

பாகிஸ்தானில் போலீசாருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதலில் 10 பேர் பலியா? விசாரணை நடத்த ராணுவ தலைமை உத்தரவு

பாகிஸ்தானில் போலீசாருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதலில் 10 பேர் பலியா? விசாரணை நடத்த ராணுவ தலைமை உத்தரவு
பாகிஸ்தானில் போலீசாருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதலில் 10 பேர் பலியானதாக தகவல் பரவியதையடுத்து விசாரணை நடத்த ராணுவ தலைமை உத்தரவிட்டுள்ளது.
கராச்சி,

பாகிஸ்தானில் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் அண்மையில் கைது செய்யப்பட்டார். நவாஸ் ஷெரீப் மருமகனை கைது செய்ய சிந்து மாகாண இன்ஸ்பெக்டர் ஜெனரல்  முஷ்தாக் மெஹரை, ராணுவ வீரர்கள் கடத்தி சென்று, வழக்குப்பதிவு செய்ய கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, சிந்து மாகாணத்தில் பணிபுரியம் 3 கூடுதல் இன்ஸ்பெக்டர் ஜெனரல்கள்,  உள்பட போலீஸ் அதிகாரிகள்  விடுப்பு எடுக்கும் போராட்டத்தில்  ஈடுபட முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் விடுமுறைக்கு விண்ணப்பித்தனர். இந்த சம்பவம் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ராணுவம் உத்தரவிட்டதையடுத்து, விடுப்பு எடுக்கும் போராட்டத்தை போலீசார் கைவிட்டுள்ளனர். 

இதற்கிடையே சமூக வலைதளத்தில் 'கராச்சியில் சிந்து மாகாண போலீசாருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. அதில் 10 கராச்சி போலீஸ் அதிகாரிகள் பலியாயினர்' என தகவல் பரவியது.இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தும்படி ராணுவ கமாண்டருக்கு ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவேத் பஜ்வா உத்தரவிட்டுள்ளார் என ராணுவ செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.