ஜெ.இ.இ தேர்வுகள் கூடுதல் மாநில மொழிகளில் நடத்தப்படும் - மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு + "||" + JEE (Main) To Be Conducted In More Regional Languages: Education Minister
ஜெ.இ.இ தேர்வுகள் கூடுதல் மாநில மொழிகளில் நடத்தப்படும் - மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு
ஜெ.இ.இ மெயின் தேர்வுகள் கூடுதல் மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாடு முழுவதிலும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜெ.இ.இ நுழைவுத்தேர்வு அவசியம் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்தத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டு வருகிறது. ஜெ.இ.இ தேர்வுகளை பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன.
இந்த கோரிக்கை தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஜெ.இ.இ முதன்மை தேர்வு மற்றும் அட்வான்ஸ் தேர்வு ஆகிய இரு கட்டங்களாக நடத்தப்படும் ஜெ.இ.இ (மெயின்) தேர்வுகள் இனிமேல் பிராந்திய மொழியில் நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் வரவேற்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
ஐஐடி, என்.ஐ.டி, ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.