இலவச கொரோனா தடுப்பூசி: பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளில் ஒன்று - ராகுல்காந்தி விமர்சனம் + "||" + GOI just announced India’s Covid access strategy
Rahul Gandhi
இலவச கொரோனா தடுப்பூசி: பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளில் ஒன்று - ராகுல்காந்தி விமர்சனம்
கொரோனா தடுப்பூசியை இலவசமாகப் பெற உங்கள் மாநிலத்தில் தேர்தல் எப்போது என்று பாருங்கள் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசால் கொரோனா தொற்றுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பொருளாதாரம், சீன எல்லை விவகாரம், உத்தரபிரதேச விவகாரம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பாஜக அரசை விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனாவை அணுகும் உத்தியை மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்று தெரிந்துகொள்ள உங்கள் மாநிலத்தில் தேர்தல் எப்போது என்று பாருங்கள். மேலும், இது பொய்யான வாக்குறுதிகளில் ஒன்று எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பீகார் மாநிலத் தேர்தலையொட்டி, தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் பீகார் மாநில மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
GOI just announced India’s Covid access strategy.
Kindly refer to the state-wise election schedule to know when will you get it, along with a hoard of false promises.