உலக செய்திகள்

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை தொடர வேண்டும் - மகிந்த ராஜபக்சே வலியுறுத்தல் + "||" + SriLanka defeated the LTTE & put a stop to its brutal terrorist activities Mahinda Rajapaksa

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை தொடர வேண்டும் - மகிந்த ராஜபக்சே வலியுறுத்தல்

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை தொடர வேண்டும் - மகிந்த ராஜபக்சே வலியுறுத்தல்
இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை தொடர வேண்டும் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே வலியுறுத்தி உள்ளார்.
கொழும்பு,

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை தவறானது எனக் கூறி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் இது குறித்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இலங்கை அரசு விடுதலைப் புலிகளை தோற்கடித்து அதன் மிருகத்தனமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றனர். எந்தவொரு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் அவர்கள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை இங்கிலாந்து அரசு தொடரும் என்று நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.