தேசிய செய்திகள்

குஜராத்தில் ‘சீ ப்ளேன்’விமான சேவையை அக்.31-ம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி + "||" + India's first seaplane service to begin 31 Oct

குஜராத்தில் ‘சீ ப்ளேன்’விமான சேவையை அக்.31-ம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

குஜராத்தில் ‘சீ ப்ளேன்’விமான சேவையை அக்.31-ம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
குஜராத்தில் ”சீ ப்ளேன்” எனப்படும் விமானம் சேவையை அக்டோபர் 31ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
புதுடெல்லி,

குஜராத் மாநிலம் சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஒற்றுமை சிலையை காண கடல்விமானம் (சீ பிளேன்) சேவை வரும் 31 ம் தேதி துவக்கப்படுகிறது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு துவக்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான  அக்டோபர் 31 முதல் குஜராத்தில் சீப்ளேன் சேவை தொடங்க உள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக கடல்விமானம் இயக்கப்படுகிறது. இந்த சேவையை ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் ஏற்றுக்கொண்டுள்ளது.  ஒரு நபருக்கு சுமார் 4,800 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  இந்த விமானத்தில் 19 பேர் வரை பயணம் செய்ய முடியும் என்ற போதிலும் , 12 பேர் வரையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 

முதற்கட்டமாக கடல் விமானம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியா காலனியில் உள்ள ஒற்றுமை சிலைக்கு செல்லும். 

தொடர்புடைய செய்திகள்

1. ”கொரோனா தடுப்பூசி வதந்திகளை வீழ்த்துங்கள்” இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றுவதில், பொய்களையும், வதந்திகளையும் சரியான தகவல்கள் மூலம் தோற்கடிக்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
2. சாதனை விருது பெறும் குழந்தைகளுடன் மோடி இன்று கலந்துரையாடுகிறார்
சாதனை விருது பெறும் குழந்தைகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்
3. குடியரசு தின அணிவகுப்பு: அதில் நமது வலிமை அடங்கி உள்ளது - பிரதமர் மோடி
குடியரசு தின அணிவகுப்பு கலாச்சார பாரம்பரியத்திற்கு செலுத்தும் மரியாதை மட்டுமல்ல, அதில் நமது வலிமையும் அடங்கி உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
4. அசாம் மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா - பிரதமர் மோடி வழங்கினார்
அசாம் மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை பிரதமர் மோடி வழங்கினார்.
5. பிரதமர் மோடி ஜனவரி 23ம் தேதி மேற்கு வங்காளம், அசாமிற்கு பயணம்
பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 23ம் தேதி மேற்கு வங்காளம், அசாமிற்கு பயணம் மேற்கொள்கிறார்.