மாநில செய்திகள்

விஜயதசமி தினத்தில் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கலாம் - தொடக்கக்கல்வி துறை அறிவிப்பு + "||" + Children can be enrolled in schools on Vijayadasami Day Department of Primary Education Notice

விஜயதசமி தினத்தில் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கலாம் - தொடக்கக்கல்வி துறை அறிவிப்பு

விஜயதசமி தினத்தில் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கலாம் - தொடக்கக்கல்வி துறை அறிவிப்பு
விஜயதசமி தினத்தில் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கலாம் என்று தொடக்கக்கல்வி துறை அறிவித்துள்ளது.
சென்னை, 

தொடக்கக்கல்வி துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விஜயதசமி தினத்தன்று பெற்றோர் தங்கள் குழந்தைகளை முதன்முதலாக பள்ளியில் சேர்ப்பது நடைமுறையில் இருந்து வருகின்ற வழக்கம் ஆகும். எனவே அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் வருகிற 26-ந்தேதி(விஜயதசமி) மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தலாம்.

அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு பெற்றோர் அறியும் வகையில் ஊர் பொது இடங்களில் பதாகைகள் வைத்தும், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கூட்டங்கள் நடத்தியும், பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி அரசு பள்ளிகளில் விஜயதசமி தினத்தன்று 5 வயதுடைய குழந்தைகளை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதுடன் அன்றைய தினமே குழந்தைகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.