ராஜஸ்தானில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.4 கோடி பணமும் பறிமுதல் செய்துள்ளனர்.
ஜெய்ப்பூர்,
13வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகின்றன. இதில் இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடின. இந்த நிலையில், ராஜஸ்தானில் சிலர் ஐ.பி.எல். போட்டி சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து ஜெய்ப்பூரில் நகர போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.4 கோடி பணம், 19 மொபைல் போன்கள் மற்றும் 2 பணம் எண்ணும் இயந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியை சேர்ந்தவர் அனீஸ் (வயது 17), நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் அததீப் (17), தேனி மாவட்டம் ஓடபட்டியை சேர்ந்தவர் அழகேஸ்வரன் (17).