மாநில செய்திகள்

தி.மு.க.வில் திருப்பூர் மாவட்டம் 4 ஆக பிரிப்பு - தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு + "||" + In the DMK Division of Tirupur District into 4 DMK Announcement by General Secretary Duraimurugan

தி.மு.க.வில் திருப்பூர் மாவட்டம் 4 ஆக பிரிப்பு - தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

தி.மு.க.வில் திருப்பூர் மாவட்டம் 4 ஆக பிரிப்பு - தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
தி.மு.க.வில் திருப்பூர் மாவட்டம் 4 ஆக பிரித்து தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை, 

தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மாவட்டத்தை, தி.மு.க. நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், திருப்பூர் மாநகர், திருப்பூர் வடக்கு, திருப்பூர் கிழக்கு, திருப்பூர் தெற்கு என 4 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது.

அதன்படி, திருப்பூர் மாநகர் மாவட்டத்தில், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் வடக்கு மாவட்டத்தில், அவிநாசி (தனி), பல்லடம், திருப்பூர் கிழக்கு மாவட்டத்தில் காங்கேயம், தாராபுரம் (தனி), திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன.

இந்த 4 மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். திருப்பூர் மாநகர் மாவட்டத்திற்கு க.செல்வராஜ், திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு இல.பத்மநாபன், திருப்பூர் கிழக்கு மாவட்டத்திற்கு மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு இரா.ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள ஊரப்பாக்கம் ஊராட்சி வி.பி.கே. நகர் பகுதியில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
2. தி.மு.க. இந்துக்களுக்கு எதிரி அல்ல - சமத்துவ பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
“பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு தி.மு.க. இந்துக்களுக்கு எதிரிபோல சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது உண்மை அல்ல” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
3. வெள்ளகோவில் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி
வெள்ளகோவில் அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர். மூவர் காயம் அடைந்தனர்.
4. அடைக்கலாபுரத்தில் தி.மு.க. மக்கள் கிராம சபை கூட்டம்; அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரத்தில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. ஆறுமுகநேரி நகர செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். கூட்டத்தில், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
5. தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறிய தேனி ஒன்றிய கவுன்சிலர் தற்கொலை
தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறிய தேனி ஒன்றிய கவுன்சிலர் தற்கொலை செய்து கொண்டார்.