உலக செய்திகள்

அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வானால் சீனா மீது நடவடிக்கை; டிரம்ப் எச்சரிக்கை + "||" + Action against China if reelected US president; Trump warns

அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வானால் சீனா மீது நடவடிக்கை; டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வானால் சீனா மீது நடவடிக்கை; டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வானால் சீனா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துயுள்ளார்.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 3ந்தேதி நடைபெற உள்ளது.  இந்நிலையில், உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட நாடுகளின் வரிசையில் அந்நாடு முதல் இடத்தில் உள்ளது.

எனினும், கொரோனா பரிசோதனை அதிகரித்ததன் வழியே இந்த எண்ணிக்கை உயர்வு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.  இந்நிலையில், அதிபர் டிரம்ப் இதுபற்றி ஊடகங்களை சந்தித்து கூறும்பொழுது, சீனாவுக்கு நாங்கள் அதிக அளவில் சில விசயங்களை செய்ய போகிறோம்.  அவர்கள் எங்களுக்கு செய்தது அவமதிப்பு என கூறினார்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முக கவசங்களை அணிவதற்கு நீங்கள் ஆதரவு அளிக்கிறீர்களா? என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், பொது இடத்தில் முக கவசங்களை அணியும் அவசியம் சீனா செய்த தவறால் ஏற்பட்டது என கூறியுள்ளார்.

நீங்கள் முக கவசம் அணிந்து அந்த இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள்.  இதற்கு காரணம் சீனா.  சரியா? இது அவமதிப்பு ஆகும்.  முற்றிலும் அவமதிப்பு ஆகும்.  ஆனால் இதனை நீங்கள் கண்டறிவீர்கள் என்று டிரம்ப் கூறினார்.

கொரோனா வைரசை சீனா வைரஸ் என டிரம்ப் மீண்டும் கூறினார்.  கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தொற்றின் முதல் மைய பகுதியாக சீனா உருவெடுத்த பின்னர் அந்நாட்டுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கும்படி, உலக சுகாதார அமைப்பு மற்றும் பிற சர்வதேச அமைப்புகளை டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்தியது.