மாநில செய்திகள்

புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் + "||" + In the new education policy Trilingual policy is not appropriate Letter from the Government of Tamil Nadu to the Central Government

புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளது.
சென்னை,

புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தநிலையில் புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய்ந்து அதில் உள்ள சாதக, பாதகங்களை அறிந்து கொள்ள உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வி துறை சார்பில் தனித்தனியாக குழு அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

அதன்படி, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் ஒரு குழுவும், பள்ளிகல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில், ‘மும்மொழி கொள்கை தமிழ்நாட்டுக்கு ஏற்புடையது அல்ல. பட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு தமிழ்நாட்டில் நடத்துவது சாத்தியம் அல்ல. கல்லூரிகள் பல்கலைக்கழகத்துடன் இணைப்பில் இருப்பது அவசியம் ஆகும். கல்லூரிகள் தாங்களாகவே பட்டங்களை வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது. மாநில அரசுக்கு கல்வியில் அதிக சுயாட்சி வழங்க வேண்டும்’ போன்ற கருத்துகள் இடம்பெற்றுள்ளது.