தேசிய செய்திகள்

கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை; டெல்லியில் மருத்துவர்கள் போராட்டம் + "||" + Not paid for the last 4 months; Doctors struggle in Delhi

கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை; டெல்லியில் மருத்துவர்கள் போராட்டம்

கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை; டெல்லியில் மருத்துவர்கள் போராட்டம்
டெல்லியில் கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் முன்கள வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள இந்து ராவ் மற்றும் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.

அவர்கள் முக கவசங்களை அணிந்தபடி தரையில் அமர்ந்தபடி, கைகளில் வாசகங்கள் எழுதிய அட்டைகளை ஏந்தியபடி தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி மருத்துவர் ஒருவர் கூறும்பொழுது, போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன் நாங்கள் மேயரிடம் சம்பள விவகாரம் பற்றி முறையிட்டோம்.  ஆனால் அதற்கு அவர் வடக்கு டெல்லி மாநகராட்சியில் பணம் இல்லை என கூறி விட்டார்.  எங்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என வருத்தமுடன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 210 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் காஞ்சீபுரம் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
3. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து சமத்துவ மக்கள் கழகத்தினர் ஒப்பாரி போராட்டம்
பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சமத்துவ மக்கள் கழக மகளிர் அணி சார்பில் திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகம் முன்பு ஒப்பாரி வைக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4. 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்
4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
5. திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர் ஆகிய 4 மண்டலங்களில் குப்பைகள் சேகரிப்பது, மக்கும் குப்பைகளை தரம் பிரிப்பது போன்ற பணிகளை தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.