தேசிய செய்திகள்

இலவச தடுப்பூசி வாக்குறுதி: பாஜக மீது சிவசேனா பாய்ச்சல் + "||" + Shiv Sena's Sanjay Raut takes dig at Centre

இலவச தடுப்பூசி வாக்குறுதி: பாஜக மீது சிவசேனா பாய்ச்சல்

இலவச தடுப்பூசி வாக்குறுதி: பாஜக மீது சிவசேனா பாய்ச்சல்
பீகார் சட்டமன்ற தேர்தலை ஒட்டி நேற்று பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில், அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது.
மும்பை,

பீகார் மாநில சட்டசபை தேர்தலையொட்டி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது, தடுப்பூசியை பெருமளவு உற்பத்தி செய்ய விஞ்ஞானிகள் அனுமதி அளித்தவுடன், பீகார் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி கிடைக்கச் செய்வோம் என்று அவர் கூறினார். பாஜகவின் இத்தகைய அறிவிப்பு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அந்த வகையில் சிவசேனா கட்சியும் கடுமையாக சாடியுள்ளது. 

சிவசேனா கட்சி செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறியதாவது:-

தடுப்பூசி இன்னும் வரவே இல்லை. அதற்குள் பா.ஜனதாவின் தேர்தல் கால வார்த்தை ஜாலங்களில் தடுப்பூசி இடம்பெற்று விட்டது. எல்லா மாநில மக்களையும் சமமாக பார்ப்பது மத்திய அரசின் பொறுப்பு இல்லையா? இந்த வாக்குறுதி, பீகாருக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடி நிதிதொகுப்பு அளிப்பதாக கொடுத்த வாக்குறுதி போன்றதா? இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. திரிபுரா காங். தலைவர் கார் மீது தாக்குதல்- பாஜக ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு
திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவரின் காரை சேதப்படுத்தியதாக பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
2. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14-ம் தேதி சென்னை வர திட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14-ம் தேதி சென்னை வர திட்டமிட்டுள்ளார்.
3. தமிழக சட்டமன்ற தேர்தல் - 38 தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க. திட்டம்?
சென்னையில் 6 தொகுதிகள் மற்ற மாவட்டங்களில் 32 தொகுதிகள் என மொத்தம் 38 தொகுதிகளில் பாஜக போட்டியிட விரும்புவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
4. கார்ப்பரேட் நிறுவனங்கள்‘விவசாயிகள் நிலத்தை பறிக்க முடியாது’ அமித்‌ஷா திட்டவட்டம்
கார்ப்பரேட் நிறுவனங்கள்‘விவசாயிகள் நிலத்தை பறிக்க முடியாது என உள்துறை அமைச்சர் அமித்‌ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
5. பஞ்சாபில் பா.ஜனதாவினர் மீது விவசாயிகள் தாக்குதல்; போலீஸ் தடியடி
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.