உலக செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் விவாதம் : டிரம்ப் சீனாவில் ஒரு ரகசிய வங்கி கணக்கு வைத்திருக்கிறார்- ஜோ பிடன் + "||" + Biden hits Trump over recently revealed Chinese bank account

ஜனாதிபதி தேர்தல் விவாதம் : டிரம்ப் சீனாவில் ஒரு ரகசிய வங்கி கணக்கு வைத்திருக்கிறார்- ஜோ பிடன்

ஜனாதிபதி தேர்தல் விவாதம் : டிரம்ப் சீனாவில் ஒரு ரகசிய வங்கி கணக்கு வைத்திருக்கிறார்- ஜோ பிடன்
விவாதத்தின் போது டொனால்டு டிரம்ப் சீனாவில் ஒரு ரகசிய வங்கி கணக்கு வைத்திருக்கிறார்; சீனாவில் வணிகம் செய்கிறார் என ஜோ பிடன் தாக்கினார்.
வாஷிங்டன்

நவம்பர் 3 ம் தேதி அமெரிக்கர்கள் ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய உள்ளனர். கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கபட்டு உள்ள அமெரிக்கர்கள் வாக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 
இனவெறி மற்றும் போலீஸ் மிருகத்தனம் போன்ற முக்கிய பிரச்சினைகள் தவிர, அவ்வப்போது பல பிரச்சினைகளுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
அமெரிக்க தேர்தல் விதிப்படி குறைந்தது 3.5 கோடி மக்கள் ஏற்கனவே வாக்களித்து விட்டனர். இது மொத்த வாக்குகளில் நான்கில் ஒரு பங்கிற்கு மேல் ஆகும் 

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் அவரது ஜனநாயக போட்டியாளரான ஜோ பிடனும் இன்று தங்கள் இரண்டாவது மற்றும் இறுதி விவாதத்தில் கலந்து கொண்டனர்.

ஜோபிடன் பேசும் போது கூறியதாவது:-

"நான் என் வாழ்க்கையில் இதுவரை எந்த வெளிநாட்டு மூலங்களிலிருந்தும் ஒரு பைசா கூட வாங்கவில்லை" "இந்த ஜனாதிபதி சீனாவில் 50 மடங்கு வரி செலுத்தியுள்ளார் சீனாவில் ஒரு ரகசிய வங்கி கணக்கு வைத்திருக்கிறார், சீனாவில் வணிகம் செய்கிறார், உண்மையில் நான் பணம் எடுப்பதைப் பற்றி பேசுகிறீர்களா? நான் எந்த நாட்டிலிருந்தும் ஒரு பைசா கூட இதுவரை எடுக்கவில்லை என கூறினார்.

மேலும் உங்கள் வரி வருமானத்தில் ஆண்டு விவ்ரங்களை நீங்கள் வெளியிடவில்லை. ஜனாதிபதியின் வெளிநாட்டு பரிவர்த்தனைகள் பற்றி மேலும் அறிய இன்னும் பல தகவ்ல்கள் உள்ளன. நீங்கள் என்ன மறைக்கிறீர்கள்? நீங்கள் ஏன் வெளியிட விரும்பவில்லை? ”

"உங்கள் வரி வருமானத்தை வெளியிடுங்கள், அல்லது ஊழலைப் பற்றி பேசுவதை நிறுத்துங்கள்" என்று பிடன் முடித்தார்.

சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் ஜ்னாதிபதி டிரம்ப் சீன வங்கி கணக்கு வைத்து இருப்பதாக செய்தி வெளியிட்டு இருந்தது குறிப்பிட தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜோ பைடன் அரிசோனா - ஜார்ஜியா மாநிலங்களை கைப்பற்றினார்; வாக்கு எண்ணிக்கை 306 ஆக உயர்வு
ஜோ பைடன் அரிசோனா மற்றும் ஜார்ஜியா மாநிலங்களை கைப்பற்றி உள்ளார். அவரது வாக்கு எண்ணிக்கை 306 ஆக உயர்ந்தது. டிரம்ப் 232 வாக்கு எண்ணிக்கையில் உள்ளார்.
2. ஜனவரி 20 க்குப் பிறகு வேறு நிர்வாகம்... தோல்வியை சூசகமாக ஒப்புக்கொண்ட டொனால்டு டிரம்ப்...?
ஜனவரி 20 க்குப் பிறகு அவர் அதிபராக இருக்க மாட்டார் என்பதை சூசமாக தெரிவித்து தனது தோல்வியை ஒப்புக்கொள்ள டொனால்டு டிரம்ப் நெருங்கி உள்ளார்.
3. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது வெட்கக்கேடானது - ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வி அடைந்ததை டிரம்ப் ஏற்க மறுப்பது வெட்கக்கேடானது என ஜோ பைடன் விமர்சித்தார்.
4. தேர்தல் முடிவுகளுக்கு முன் டிரம்ப் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளை நீக்கி விசுவாசிகளை நியமித்தார்
தேர்தல் முடிவுகளுக்கு முன் டிரம்ப் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளை நீக்கி தனது விசுவாசிகளை நியமித்து உள்ளார். இதனால் பென்டகன் அதிகாரிகளிடையே எச்சரிக்கை உணர்வை தூண்டி உள்ளது.
5. அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்வியை டிரம்ப் ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது- ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்வியை டிரம்ப் ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளதாக ஜோ பைடன் கூறியுள்ளார்.