தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பரிசோதனை 10 கோடியை தாண்டியது- ஐசிஎம்ஆர் தகவல் + "||" + Total 10,01,13,085 samples tested for #COVID19 up to 22nd October. Of these, 14,42,722 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR)

இந்தியாவில் கொரோனா பரிசோதனை 10 கோடியை தாண்டியது- ஐசிஎம்ஆர் தகவல்

இந்தியாவில் கொரோனா பரிசோதனை 10 கோடியை தாண்டியது- ஐசிஎம்ஆர் தகவல்
இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது.
புதுடெல்லி,

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த  பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்று  உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியது. 

இதனால்,  தொற்று பாதித்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல் தடம் அறிதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இந்தியாவில்  கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டது. சராசரியாக தினமும் 10 லட்சத்திற்கும் அதிகமான மாதிரிகள் இந்தியாவில் கடந்த பல  வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 14,42,722- கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டும் தீவிர பரிசோதனைகளால் கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் வேகம் குறைந்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,666 பேருக்கு கொரோனா தொற்று: மேலும் 123 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தை: வெள்ளை மாளிகை தகவல்
தொலைபேசி மூலம் இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
3. 150 -க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா மருத்துவ பொருட்களை வழங்கியுள்ளது; வெளியுறவுத்துறை
பெருந்தொற்று காலத்தில் 150- க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா மருத்துவ பொருட்களை வழங்கியுள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
4. இந்தியாவில் இதுவரை 23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது - சுகாதார அமைச்சகம்
இந்தியாவில் இதுவரை 23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.