செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் கட்ட முதல்வர் அடிக்கல் நாட்டினார் + "||" + Chengalpattu and Kallakurichi districts Build a collector's office Chief minister laid the foundation
செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் கட்ட முதல்வர் அடிக்கல் நாட்டினார்
புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் கட்ட முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
சென்னை
தமிழகத்தில் சமீபத்தில் 4 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. காஞ்சீபுரம் மாவட்டம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களாக பிரிந்தது.
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களாகவும், நெல்லை மாவட்டம், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. அந்த வகையில் 5 மாவட்டங்கள் புதிதாக உருவாகியுள்ளன.
புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் கட்ட முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். ரூ.119.21 கோடி மதிப்பில் செங்கல்பட்டு, ரூ.104 கோடியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுகிறது
ஏற்கனவே திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டி உள்ளார். 5 புதிய மாவட்டங்களில் தென்காசிக்கு மட்டும் ஆட்சியர் அலுவலகம் கட்ட இதுவரை இடம் தேர்வு செய்யப்படவில்லை
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுப்பதற்கு பதிலாக, உரிய இழப்பீட்டுத் தொகையை இந்து சமய அறநிலையத்துறைக்கு செலுத்திவிட்டு அந்த இடத்தை ஏன் கையகப்படுத்தக்கூடாது? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 2-வது நாளாக நடந்த காத்திருப்பு போராட்டத்தில் போலீசார் கைது செயியும்போது தடுப்புகளை கீழே தள்ளிவிட்டு கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட முயன்றனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் 51 பேரை போலீசார் கைது செய்தனர்.