இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
கொழும்பு,
இலங்கையில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால், கொழும்பு நகரின் பல இடங்கள் மற்றும் அதன் அருகில் உள்ள ஆறு கிராமங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இலங்கையின் முக்கிய மீன் சந்தையில் வியாபாரம் செய்து வந்த 49 -வியாபரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மீன் சந்தை மூடப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்று ஒருநாளில் மட்டும் 309- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை 6,287- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புடன் 2,700 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.