தேசிய செய்திகள்

நாட்டின் நலனுக்காக ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் எல்லாவற்றையும் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன - பிரதமர் மோடி + "||" + Prime Minister Narendra Modi to shortly address a public rally in Bhagalpur

நாட்டின் நலனுக்காக ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் எல்லாவற்றையும் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன - பிரதமர் மோடி

நாட்டின் நலனுக்காக ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் எல்லாவற்றையும் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன - பிரதமர் மோடி
தேசிய நலனுக்கு எதிராக ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் எல்லாவற்றையும் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.
பாட்னா,

பீகார் மாநிலத்தில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடக்க உள்ளது. நவம்பர் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதில் முதல் கட்டத் தேர்தல் வரும் 28-ம் தேதி 71 தொகுதிகளுக்கு நடக்கிறது. இதற்கான முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டார்.  பாகல்பூரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

உச்சநீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என உத்தரவிட்ட போது எதிர்க்கட்சிகள் எதிராக நின்றனர். தேசிய நலனுக்கு எதிராக ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அவை எல்லாவற்றையும் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றனர். 

தங்கள் குடும்ப நலனைப் பற்றியே அவர்கள் சிந்திக்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்று பீகார் மக்கள் முடிவு செய்துள்ளனர். பீகாரை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்து செல்ல தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டியது அவசியம்.

பீகார் மாநிலம் வளர்ச்சியை நோக்கிச் செல்ல நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. மே 2-ந்தேதி முன்னாள் முதல்-மந்திரி ஆகிவிடுவார், மம்தா பானர்ஜி - பிரதமர் மோடி சொல்கிறார்
மே 2-ந்தேதி, மம்தா பானர்ஜி முன்னாள் முதல்-மந்திரி ஆகிவிடுவார் என்று பிரதமர் மோடி கூறினார்.
2. நாடு முழுவதும் போதுமான அளவு தடுப்பூசி கிடைப்பதில் அரசு உறுதி - கவர்னர்களுடனான சந்திப்பில் பிரதமர் மோடி தகவல்
நாடு முழுவதும் போதுமான அளவு தடுப்பூசி கிடைக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக கவர்னர்களுடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி கூறினார்.
3. அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
4. திறன்மிக்க இளைஞர்களின் பங்கு அதிகரிப்பு - பிரதமர் மோடி
இந்தியா தற்சார்பு பாதையில் பயணிப்பதில் திறன்மிக்க இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
5. நவராத்திரி, யுகாதி பண்டிகைகளை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
நவராத்திரி, யுகாதி உள்ளிட்ட பண்டிகைகளை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.