தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் நடவடிக்கைகளால் லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் நிலை உருவாகி உள்ளது - ராகுல்காந்தி தாக்கு + "||" + Congress Leader Rahul Gandhi on Center's Farm Laws during BiharPoll rally

பிரதமர் மோடியின் நடவடிக்கைகளால் லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் நிலை உருவாகி உள்ளது - ராகுல்காந்தி தாக்கு

பிரதமர் மோடியின் நடவடிக்கைகளால் லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் நிலை உருவாகி உள்ளது - ராகுல்காந்தி தாக்கு
பிரதமர் மோடியின் நடவடிக்கைகளால் லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் நிலை உருவாகி உள்ளது என்று ராகுல்காந்தி கூறினார்.
பாட்னா,

பீகாரில் வரும் 28ம் தேதி முதல் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில், நவாடா மாவட்டம் ஹிசுவாவில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் காங்., எம்.பி ராகுல்காந்தி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கூறியதாவது:-

எங்கு சென்றாலும் பொய் மட்டுமே சொல்கிறார் பிரதமர் மோடி. விவசாயி, தொழிலாளரை ஆதரிப்பதுபோல் பேசும் மோடி உண்மையில் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார். பிரதமர் மோடியின் நடவடிக்கைகளால் லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் நிலை உருவாகி உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பீகார் மாநிலத்திற்கு எதுவும் செய்யவில்லை.

சீன ராணுவம் நமது 20 வீரர்களை கொன்று, இந்தியாவின் 1200 கிலோமீட்டர் நிலத்தை கையகப்படுத்தியது. சீனா எங்கள் நிலத்திற்குள் ஊடுருவியபோதும், யாரும் இந்திய எல்லைக்குள் வரவில்லை என, நமது பிரதமர் வீரர்களை அவமதித்துள்ளார்.