மாநில செய்திகள்

பெண்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்ததற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் - குஷ்பு பேட்டி + "||" + Thirumavalavan should apologize - Khushbu

பெண்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்ததற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் - குஷ்பு பேட்டி

பெண்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்ததற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் - குஷ்பு பேட்டி
கட்சி மாறிச்செல்வதை விமர்சிக்கும் தலைவர், பெண்கள் குறித்து இழிவாகப் பேசுவதை கண்டிக்காதது ஏன்? என்று குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,

அண்மையில் பாஜகவில் இணைந்த குஷ்பு சென்னை தி.நகர் கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கட்சி மாறிச்செல்வதை விமர்சிக்கும் தலைவர், பெண்கள் குறித்து இழிவாகப் பேசுவதை கண்டிக்காதது ஏன்? பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதாகச் சொல்லும் திமுக வாய்திறக்காதது ஏன்?

பெண்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்ததற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு மதத்தை சார்ந்த பெண்களை இழிப்படுத்தி பேசியது சரியா? திருமாவளவன் பேசியது மிகவும் தவறு. 

கூட்டணியில் உள்ள திருமாவளவன் பேசியது பற்றி திமுக-காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம் வரை சென்று திருமாவளவனுக்கு ஏற்கனவே நான் பதிலளித்து விட்டேன். 

திராவிட கொள்கைகளை அவரவர் வீட்டிலேயே கொண்டு சேர்க்காதவர்கள் மக்களிடம் எப்படி கொண்டு செல்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.