தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று மேலும் 7,347 பேருக்கு கொரோனா பாதிப்பு - மாநில சுகாதாரத்துறை தகவல் + "||" + Maharashtra reports 7,347 new COVID19 cases, 184 deaths and 13,247 discharges in the last 24 hours, as per the state's Public Health Department.

மராட்டியத்தில் இன்று மேலும் 7,347 பேருக்கு கொரோனா பாதிப்பு - மாநில சுகாதாரத்துறை தகவல்

மராட்டியத்தில் இன்று மேலும் 7,347 பேருக்கு கொரோனா பாதிப்பு - மாநில சுகாதாரத்துறை தகவல்
மராட்டியத்தில் இன்று மேலும் 7,347 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் மராட்டியம் தான் உள்ளது. மாநிலத்தில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது.

இந்த நிலையில், மராட்டிய மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மராட்டியத்தில் மேலும் 7,347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,32,544 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 184 பேர் கொரோனாவால் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 43,015 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 13,247 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து இதுவரை 14,45,103 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,43,922 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் பொது முடக்கத்திற்கு நிகரான கட்டுப்பாடுகளை அறிவித்தது மாநில அரசு
மராட்டிய அரசு நேற்று மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது.
2. மராட்டியத்தில் இன்று மேலும் 67,468 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 67,468 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று புதிதாக 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கோவா மாநிலத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல் - கோவா அரசு
கோவா மாநிலத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
5. மராட்டியத்தில் இன்று மேலும் 62,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 62,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.