உலக செய்திகள்

கொரோனா பாதிப்புகளால் மோசமடைந்து வருகிறது பாகிஸ்தான் + "||" + Pakistan is getting worse due to corona infections

கொரோனா பாதிப்புகளால் மோசமடைந்து வருகிறது பாகிஸ்தான்

கொரோனா பாதிப்புகளால் மோசமடைந்து வருகிறது பாகிஸ்தான்
கொரோனா பாதிப்புகளால் பாகிஸ்தானின் நிலைமை மோசமடைந்து வருகிறது என அந்நாட்டு தேசிய ஆணை மற்றும் செயல் மையம் தெரிவித்து உள்ளது.
லாகூர்,

பாகிஸ்தான் நாட்டில் கொரோனா பாதிப்புகள் பற்றிய தேசிய ஆணை மற்றும் செயல் மையம் சார்பில் இன்று நடந்த கூட்டத்தில் பேசிய சுகாதார அதிகாரிகள், கொரோனா பாதிப்பு விகிதம் நாட்டில் உயர்ந்து வருகிறது.  மருத்துவமனைகளில் நோயாளிகளை சேர்ப்பது அதிகரித்து உள்ளது.  உயிரிழப்பு எண்ணிக்கையும் திடீரென உயர்ந்து வருகிறது என தெரிவித்துள்ளது.

இதுபற்றிய அறிக்கை ஒன்றில், தொடர்ந்து 5வது நாளாக கொரோனா பாதிப்பு விகிதம் உயர்ந்த நிலையில் காணப்படுகிறது.  அது 40 சதவீதம் அளவை எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானின் முசாபராபாத், ஐதராபாத், கராச்சி மற்றும் கில்கித் ஆகிய நகரங்களில் அதிகளவு கொரோனா பாதிப்பு விகிதம் உள்ளது.  நாடு முழுவதும் பிற பகுதிகளிலும் இந்த விகிதம் அதிகரித்து உள்ளது என மையத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்நாட்டின் கொரோனா வளர்ச்சி விகிதம் 2.06 சதவீதம் என்ற அளவில் உள்ளது.  இது சர்வதேச அளவில் 2.72 சதவீதம் என்ற அளவில் காணப்படுகிறது.

இதேபோன்று மொத்த உயிரிழப்புகளில் 71 சதவீதத்தினர் ஆண்களாக உள்ளனர்.  அவர்களில் 76 சதவீதத்தினர் 50 வயது கடந்தவர்களாக உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கடந்த 2 மாதங்களில் இல்லாத வகையில், கடந்த 21ந்தேதி கொரோனா பாதிப்பு விகிதம் பாகிஸ்தானில் 2.58 சதவீதம் என்ற அளவில் இருந்தது.  நிலைமையை தேசிய ஆணை மற்றும் செயல் மையம் உன்னிப்புடன் கவனித்து வருகிறது என்று தெரிவித்து உள்ளது.

அதில் வளர்ச்சி இல்லையெனில், சேவைகளை நிறுத்தும் கடுமையான பழைய முடிவுகளை மீண்டும் எடுக்க வேண்டி வரும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  பாகிஸ்தானில் 3,24,744 பேர் கொரோனா பாதிப்புகளை சந்தித்து உள்ளனர்.  இதுவரை அந்நாட்டில் 6,692 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டேன் - சானியா மிர்சா
கொரோனா பாதிப்பில் இருந்து தான் குணமடைந்து விட்டதாக, இந்திய முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
2. ஐ.நா. அமைப்பின் அமைதி காப்பாளர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம்
ஐ.நா. அமைப்பின் அமைதி காப்பாளர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு மத்திய வெளிவிவகார அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
3. கேரளாவில் இன்று மேலும் 6,186- பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
கேரளாவில் இன்று மேலும் 6,186- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனா பாதிப்பு: உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
5. தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகள் தொடக்கம் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகள்
தமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்.