மாநில செய்திகள்

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு + "||" + Increase in wind power generation in Tamil Nadu

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மின் உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அதிக காற்றாலைகள் உள்ளன. இந்தியாவில் உள்ள சுமார் 25 ஆயிரம் காற்றாலைகளில் சுமார் 10 ஆயிரம் காற்றாலைகள் தமிழகத்தில் தான் உள்ளன.

தமிழகத்தின் மின் தேவையை அனல், நீர், காற்று மற்றும் அணு மின்சாரம் பூர்த்தி செய்கின்றன. காற்றாலைகள் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத மின்சாரம் கிடைக்கிறது. வழக்கமாக மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் அதிக அளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தி ஆகும்.

ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்றாலை மின்சாரம் உற்பத்தி உயர்ந்து உள்ளது. அதாவது, 2019-ம் ஆண்டை பொறுத்தமட்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 9,189 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த ஆண்டு 9,236 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நாளுக்கு நாள் வேகமாக பரவும் தொற்று: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று புதிதாக 12,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று புதிதாக 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது
தமிழகத்தில் தீவிரமாக கொரோனா பரவிவரும் சூழ்நிலையில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு என்பது இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு என்பது இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
5. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.