ஸ்பெயினில் உண்மையான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சம் இருக்கும்; பிரதமர் பேச்சு + "||" + The actual corona vulnerability in Spain would be 30 million; PM speech
ஸ்பெயினில் உண்மையான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சம் இருக்கும்; பிரதமர் பேச்சு
ஸ்பெயின் நாட்டில் உண்மையான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்திற்கு மேல் இருக்கும் என அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.
மாட்ரிட்,
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளன. இவற்றில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினும் அடங்கும். அந்நாட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சம் கடந்துள்ளது என கூறப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த எண்ணிக்கையை கடந்த முதல் நாடாக ஸ்பெயின் கூறப்பட்டது. இதனால், இந்த வைரசின் பரவலை குறைக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் கூறும்பொழுது, நாட்டில் உண்மையான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறி அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். விஷம் போன்றவர்கள் என்றும் தமிழகம், புதுச்சேரிக்குள் அவர்களை அனுமதிக்காதீர் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேட்டியில் கூறியுள்ளார்.