மாநில செய்திகள்

சென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்கு தினசரி சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு + "||" + From Chennai Daily special train to Thanjavur, Trichy and Kollam Southern Railway Notice

சென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்கு தினசரி சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்கு தினசரி சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்கு தினசரி சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* தஞ்சாவூர்-சென்னை எழும்பூர் (வண்டி எண்: 06866) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 26-ந்தேதி முதல், தஞ்சாவூரில் இருந்து தினசரி இரவு 9.50 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக எழும்பூர்-தஞ்சாவூர் (06865) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 27-ந்தேதி முதல், தினசரி எழும்பூரில் இருந்து இரவு 10.55 மணிக்கு புறப்படும்.

* எழும்பூர்-கொல்லம் (06101) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 25-ந்தேதி (நாளை) முதல், மாலை 5 மணிக்கு தினசரி எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக கொல்லம்-எழும்பூர் (06102) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 26-ந்தேதி முதல், தினசரி மதியம் 12 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும்.

* எழும்பூர்-திருச்சி (02653) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 27-ந்தேதி முதல், எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தினசரி இரவு 11.15 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக திருச்சி-எழும்பூர் (02654) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 26-ந்தேதி முதல், தினசரி இரவு 10.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும்.

மேற்கண்ட சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்
சென்னையில் இருந்து நாகர்கோவில், மன்னார்குடி, ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
2. சென்னையில் இருந்து காரைக்கால், திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில்
சென்னையில் இருந்து காரைக்கால், திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.