தேசிய செய்திகள்

கொரோனா தொற்று; டெல்லியில் 34 நாட்களில் இல்லாத அளவுக்கு அதிக பாதிப்பு + "||" + Corona infection; The worst impact in 34 days in Delhi

கொரோனா தொற்று; டெல்லியில் 34 நாட்களில் இல்லாத அளவுக்கு அதிக பாதிப்பு

கொரோனா தொற்று; டெல்லியில் 34 நாட்களில் இல்லாத அளவுக்கு அதிக பாதிப்பு
டெல்லியில் 34 நாட்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் பதிவாகி உள்ளன.
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து உலக அளவில் இந்தியா 2வது இடம் பிடித்து உள்ளது.  எனினும், சமீப நாட்களாக இந்த பாதிப்புகளின் விகிதம் குறைந்து வருகிறது.  எனினும் தலைநகர் டெல்லியில் புதிய உச்சம் அடைந்து வருகிறது.  இதனால், கொரோனா பாதிப்புகள் 4 ஆயிரம் எண்ணிக்கைக்கு மேல் பதிவாகி உள்ளது.

டெல்லியில் நேற்று 4,086 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டன.  இது கடந்த 34 நாட்களில் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கை ஆகும்.

இந்த புதிய பாதிப்புகள் 58,568 மாதிரிகளில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் இருந்து தெரிய வந்துள்ளன.  இதனால், டெல்லியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.48 லட்சம் ஆக உயர்ந்து உள்ளது.  நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் சூழலில் தலைநகரில் புதிய உச்சம் அடைந்து இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 26 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. காங். மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவுக்கு கொரோனா தொற்று
காங்கிரஸ் முத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஒரே நாளில் 84 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 522 ஆக உயர்ந்துள்ளது.
4. கேரளாவில் மேலும் 13,644- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,644- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. திருப்போரூர் அருகே தனியார் குடியிருப்பில் 12 பேருக்கு கொரோனா தொற்று
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.