உலக செய்திகள்

பிரான்சில் தொடர்ந்து உயர்வு; 10 லட்சம் கடந்தது கொரோனா பாதிப்பு + "||" + Continued rise in France; Corona damage exceeding 10 lakhs

பிரான்சில் தொடர்ந்து உயர்வு; 10 லட்சம் கடந்தது கொரோனா பாதிப்பு

பிரான்சில் தொடர்ந்து உயர்வு; 10 லட்சம் கடந்தது கொரோனா பாதிப்பு
பிரான்சில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சம் கடந்துள்ளது.
பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசின் பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  நாளொன்றுக்கு 40 ஆயிரத்திற்கு மேல் புதிய பதிவுகள் ஏற்படுகின்றன.  இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 9,99,043 ஆக உயர்ந்து இருந்தது.

இதேபோன்று மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34,210 ஆக உயர்ந்து இருந்தது.  வரும் வாரங்களில் நாட்டில் தொற்று நிலை கடினமடைய கூடும் என அந்நாட்டின் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் எச்சரிக்கை விடுத்ததுடன், சூழ்நிலை மோசமடைந்து விட்டால் நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், நேற்று 42,032 பேருக்கு புதிய பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டன.  இதனால் பிரான்சில் மொத்த எண்ணிக்கை 10 லட்சம் என்ற அளவை கடந்துள்ளது.  இதனை அந்நாட்டு சுகாதார சேவை துறை தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டேன் - சானியா மிர்சா
கொரோனா பாதிப்பில் இருந்து தான் குணமடைந்து விட்டதாக, இந்திய முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
2. கேரளாவில் இன்று மேலும் 6,186- பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
கேரளாவில் இன்று மேலும் 6,186- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா பாதிப்பு: உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
4. தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகள் தொடக்கம் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகள்
தமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்.
5. கேரள சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்ட 4 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரள சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்ட 4 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.