சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையிலும் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்புகளே பதிவாகிறது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கு தளர்வால் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. அப்போது பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் கண்டறிந்து அந்த தெருக்களுக்கு சீல் வைத்து வந்தனர்.
அந்த வகையில் அதிகபட்சமாக 70 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் குறைந்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் 5 தெருக்களும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2 தெருக்களும், ராயபுரம் மண்டலத்தில் 5 தெருக்களும், அண்ணாநகர் மண்டலத்தில் ஒரு தெருவும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 2 தெருக்களும், கோடம்பாக்கம், அடையாறு, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் தலா ஒரு தெருவும் என 18 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குடியிருப்பில் வீடு புகுந்து திருட்டு நடைபெற்றுள்ளதாக சட்டசபை செயலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.