தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு: கடந்த 8 மாதங்களில் அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும்...! + "||" + GST collections may cross Rs 1 lakh-crore mark for the first time in 8 months

கொரோனா பாதிப்பு: கடந்த 8 மாதங்களில் அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும்...!

கொரோனா பாதிப்பு: கடந்த 8 மாதங்களில் அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும்...!
கொரோனா பாதிப்பு காலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக அக்டோபரில் ரூ .1 லட்சம் கோடியை தாண்டக்கூடும் என தகவ்ல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதித்த எட்டு மாதங்களில் முதல் முறையாக அக்டோபரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ .1 லட்சம் கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா தொற்று நோய் பாதிப்பால்  மார்ச் 25 முதல் 68 நாள் கடின ஊரடங்கு விதிக்கப்பட்டது. இது அனைத்து துறைகளிலும் உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களை தற்காலிகமாக வணிகத்தை  மூடுவதற்கு கட்டாயப்படுத்தியது, ஆனால் அவை அவசியமானவை என்று கருதப்பட்டன. இவை படிப்படியாக தளர்த்தப்பட்டன.

ஊரடங்கு தளர்வினால் அதிகமான வணிகங்கள் நடைபெற்றதாலும், பொருளாதார நடவடிக்கைகள் அதிக வேகத்தை எடுதத்தாலும், மேலும்  பண்டிகைகாலம் என்பதால் இந்த மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் வலுவாக இருப்பதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

ஜிஎஸ்டி வருமானத்தை தாக்கல் செய்வதன் மூலம், அக்டோபரில் மறைமுக வரி வசூல் “ரூ .1 லட்சம் கோடிக்கு மேல் இருக்கக்கூடும் என்று ஒரு அதிகாரி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 11-வது ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று தொடக்கம்: அனைத்து கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகளை 7-ந் தேதி முதல் நடத்த அனுமதி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் 11-வது ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று தொடங்குகிறது. அனைத்து கல்லூரிகளிலும் இறுதியாண்டு வகுப்புகளை 7-ந் தேதி முதல் நடத்த அனுமதி அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
2. மருத்துவத்துறையை ஆச்சரியப்பட வைத்த விஷயம் பிறந்த குழந்தையின் உடலில் கொரோனா எதிர்ப்பு சக்தி
சிங்கப்பூரில் ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தையின் உடலில் கொரோனா எதிர்ப்பு சக்திகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
3. கொரோனா தடுப்பூசி குறித்து எளிய மொழியில் சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும் - விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
கொரோனா தடுப்பூசி குறித்து ஒரு எளிய மொழியில் சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும் என பிரதமர் மோடி விஞ்ஞானிகளை கேட்டுக்கொண்டார்.
4. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம்
இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான துவக்கம் பெற்றுள்ளது.
5. இந்தியாவின் மோசமான சுகாதார அமைப்புகளால் உருவான கொரோனா வைரஸ் சீனா குற்றச்சாட்டு
கொரோனா வைரஸால் உலகமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வைரசின் தீவிரம் மீண்டும் அதிகமாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், வைரஸ் உருவான இடம் பற்றி சீனா மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.