உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்: ஆய்வு தகவல் + "||" + More than half a million people in the US may die of coronavirus by February: Study

கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்: ஆய்வு தகவல்

கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்: ஆய்வு தகவல்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் எதிர்வரும் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று ஆய்வு அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
வாஷிங்டன்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது. இதுவரை 2.21 லட்சம் பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், அமெரிக்க மக்களில் பலர் கொரோனா நெருக்கடியை கையாள்வதில் டிரம்பிற்கு பதிலாக ஜோ பிடன் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகளுக்கான மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கூறப்ப்ட்டு இருப்பதாவது:-

குறைந்த அளவிலான கொரோனா திறன் சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பு மருந்துகளில்லா நிலையில்,குளிர்காலத்தில் கொரோனா பாதிப்புகளை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டும்.

பெரிய அளவில் பாதிப்புகள் சரிவை நோக்கிச் சென்றாலும், குளிர்காலத்தில் உயரும் நிலை ஏற்படும்.

தொற்று விகிதம் மற்றும் மரணங்கள் ஆகியவற்றில் உயர்வு காணப்படும் சூழலில், கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்பதில் அடிப்படை இல்லை.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படக்கூடும்.ஆனால், ஒவ்வொருவரும் முகக்கவசம் கட்டாயம் அணிவதன் மூலம் 1.3 லட்சம் உயிர்களைப் பாதுகாக்கலாம் என ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. புலம்பெயர் தொழிலாளர்கள் யாரும் டெல்லியை விட்டு வெளியேற வேண்டாம் - அரவிந்த கெஜ்ரிவால் கைகூப்பி வேண்டுகோள்
புலம்பெயர் தொழிலாளர்கள் யாரும் டெல்லியை விட்டு வெளியேற வேண்டாம் என முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கைகூப்பி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
2. தடுப்பூசிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் பொய் பிரசாரம் ;மன்மோகன் சிங் கடிதத்துக்கு ஹர்ஷ் வர்தன் பதில்
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கொரோனா தடுப்பூசி குறித்து பொய்யான தகவல்களைப் பரப்பி, பல உயிர்களோடு விளையாடி வருகிறார்கள் என மன்மோகன் சிங் எழுதிய கடிதத்துக்கு ஹர்ஷ் வர்தன் பதில் அளித்து உள்ளார்.
3. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை மீண்டும் ரத்து
கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை மீண்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
4. முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை -டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்
முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை என டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அற்வ்விக்கப்பட்டு உள்ளது.
5. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குவியும் வட மாநில தொழிலாளர்கள்
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குவியும் வட மாநில தொழிலாளர்கள். ரெயிலுக்காக காத்து இருக்கிறார்கள்.