தேசிய செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றிக்கு இந்தியா இதயபூர்வமாக பணியாற்றி உள்ளது- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் + "||" + India invested deeply in success of United Nations, says EAM Jaishankar

ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றிக்கு இந்தியா இதயபூர்வமாக பணியாற்றி உள்ளது- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றிக்கு இந்தியா இதயபூர்வமாக பணியாற்றி உள்ளது- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றிக்கு இந்தியா இதயபூர்வமாக பணியாற்றி உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
புதுடெல்லி:

ஐ.நாவின் 75 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி  நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:-

ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபக உறுப்பினராக, ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளை வடிவமைப்பதில் இருந்து, அதன் அமைதியைக் காத்துக்கொள்வதில் முன்னணியில் இருப்பது வரை, இந்தியா தனது இதயப்பூர்வமாக பங்களிப்பை ஆற்றி உள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றிக்கு இந்தியா கடுமையாக பணியாற்றி உள்ளத

உலகெங்கிலும் உள்ள ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணிகளுக்கு இந்தியா பெரும் படைகளை வழங்கி வருகிறது.

ஐ.நா.வின் 75 ஆவது ஆண்டு நிறைவு என்பது இந்த அமைப்புக்கு ஒரு முக்கியமான மைல்கல் உலக அமைப்பு உலக நாடுகள் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைந்து மனிதகுலத்தின் சிறந்த எதிர்காலத்தை நோக்கி செயல்பட ஒரு தளமாக உள்ளது.

"ஐ.நா.வின் 75 ஆண்டுகால பயணத்தின் இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தில், ஐ.நா.வின் குறிக்கோள்களையும்  அதன் உறுப்பு நாடுகளின் அபிலாஷைகளுக்கு நெருக்கமாக கொண்டுவருவதற்கு கைகோர்க்கவும், வீரியத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட நாங்கள் எங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்வோம் என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம்
இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான துவக்கம் பெற்றுள்ளது.
2. அபோதாபாத்தை நினைவு படுத்துகிறோம் ”ஐநாவுக்கு பாகிஸ்தான் வழங்கிய ஆவணங்கள் அனைத்தும் பொய்யானவை -இந்தியா
அபோதாபாத்தை நினைவு படுத்துகிறோம் ஐநாவுக்கு பாகிஸ்தான் வழங்கிய ஆவணங்கள் அனைத்தும் பொய்யானவை என இந்தியா கூறி உள்ளது.
3. மொபைல் செயலிகளுக்கு தொடர்ந்து இந்திய தடை ; சீனா கடும் எதிர்ப்பு
தங்கள் நாட்டின் மொபைல் செயலிகளுக்கு தொடர்ந்து இந்திய தடை விதித்து வருவதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
4. பூட்டானிய எல்லைக்குள் ஊடுருவி இந்தியாவின் டோக்லாமிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சீனா- செயற்கைகோள் படங்கள்
சீனா பூட்டானிய எல்லைக்குள் டோக்லாம் பீடபூமியின் கிழக்கு பகுதியில் இரண்டு கிலோமீட்டர் ஊடுருவி சுமார் 9 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு சாலையைக் கட்டியுள்ளது என உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள் காட்டுகிறது.
5. பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்த சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு
ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவிய சுரங்கப்பாதை நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.