உலக செய்திகள்

அமெரிக்காவில் கடற்படை விமானம் விபத்துக்குள்ளானது- விமானிகள் இருவர் பலி + "||" + 2 Pilots Onboard US Navy Plane Killed In Aircraft Crash In Alabama

அமெரிக்காவில் கடற்படை விமானம் விபத்துக்குள்ளானது- விமானிகள் இருவர் பலி

அமெரிக்காவில் கடற்படை விமானம் விபத்துக்குள்ளானது-  விமானிகள் இருவர் பலி
அமெரிக்காவில் கடற்படைக்கு சொந்தமான விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் கடற்படை விமானம் விபத்துக்குள்ளானது. புளோரிடா மகாணத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 

இந்த விபத்தில் விமானிகள் இருவரும் உயிரிழந்தனர். கடற்படைக்கு சொந்தமான இருவர் மட்டுமே அமரக்கூடிய  T-6B Texan II - என்ற விமானம் போலே நகரில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில், சில வீடுகளும் கார்களும் தீயில் சிக்கியதாக கூறப்படுகிறது. 

எனினும், இந்த விபத்தில் பொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டார்களா? என்பது குறித்து உடனடியாக தகவல் எதுவும் இல்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் உள்ளூர் அதிகாரிகளுடன் கடற்படை தொடர்பில் இருப்பதாகவும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். 


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க முன்னாள் துணை அதிபர் காலமானார்
அமெரிக்க முன்னாள் துணை அதிபர் வால்டர் மண்டிலி தனது 93-வது வயதில் இன்று காலமானார்.
2. இந்தியாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்: அமெரிக்கா அறிவுறுத்தல்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 2.50 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது.
3. அமெரிக்காவில் 16-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: அதிபர் ஜோ பைடன்
அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
4. சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி உயிரிழந்தால் ரஷியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் அமெரிக்கா எச்சரிக்கை
ரஷியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி உயிரிழந்தால் ரஷியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
5. அமெரிக்காவில் இதுவரை 20.94 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 20.94 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.