தேசிய செய்திகள்

குஜராத்தில் இன்று மூன்று முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் + "||" + PM Modi to launch three major projects including Kisan Suryodaya Yojana in Gujarat today

குஜராத்தில் இன்று மூன்று முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

குஜராத்தில் இன்று மூன்று முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
குஜராத்தில் மூன்று முக்கியமான திட்டங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
அகமதாபாத்

விவசாயத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் விவசாயிகள் இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமற்றது. மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் மாநில விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பல நலத்திட்டங்களைத் தொடங்குகின்றன.

குஜராத்தில் மூன்று முக்கியமான திட்டங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

குஜராத் விவசாயிகளுக்காக 'கிசான் சூரியோதய யோஜனா' திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். 'கிசான் சூரியோதய யோஜனா' என்பது பகலில் நீர்ப்பாசனத்திற்கு மின்சாரம் வழங்கும் திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகள் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மின்சாரம் பெற முடியும்.

இது தவிர,  சுற்றுலாவுக்காக கிர்னாரில் ரோப் கார் திட்டத்தையும் பிரதமர் மோடி துவக்கி வைப்பார். இது ஆரம்பத்தில் எட்டு பேரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட 25-30 கேபின்களைக் கொண்டிருக்கும். இந்த ரோப்வே  7.5 நிமிடங்களில் 2.3 கிலோமீட்டர் தூரம் செல்லும். இந்த ரோப்வேயில் பயணம் செய்யும் போது கிர்னர் மலையைச் சுற்றியுள்ள இயற்கை அழகை சுற்றுலாப் பயணிகள் காண முடியும்.

மூன்றாவது திட்டமாக பிரதமர் மோடி யு.என். மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் தொடர்புடைய குழந்தை இதய மருத்துவமனையையும் திறந்து வைக்கிறார். மேலும் அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் டெலிகார்டியாலஜிக்கான மொபைல் திட்டத்தை திறந்து வைப்பார். உலகத் தரம் வாய்ந்த மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகளுடன் கூடிய சில மருத்துவமனைகளில் யு.என் மேத்தா நிறுவனம் ஒன்றாகும்.

மேத்தா இருதயவியல் நிறுவனம் ரூ.470 கோடி செலவில் விரிவுபடுத்தப்படுகிறது.  இங்குள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 450 முதல் 1251 ஆக உயரும். இந்த நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய ஒற்றை சூப்பர்-ஸ்பெஷாலிட்டி இருதய கல்வி நிறுவனமாகவும், உலகின் மிகப்பெரிய ஒற்றை சூப்பர் ஸ்பெஷாலிட்டி இருதய மருத்துவமனைகளாகவும் மாறும்.


தொடர்புடைய செய்திகள்

1. விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் தடுப்பு மருந்து போடும் பணி விரைவில் தொடங்கும் - பிரதமர் மோடி
முன்கள பணியாளர்கள், முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.
2. புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் 225 இடங்களில் மழை ; அடுத்த 3 நாட்களுக்கும் மழைக்கு வாய்ப்பு
புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் 225 இடங்களில் மழை பதிவாகி இருக்கிறது. அடுத்த 3 நாட்களுக்கும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. புரெவி புயல் : தூத்துக்குடியில் கன மழை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம்- கலெக்டர் அறிவுரை
புரெவி புயல் காரணமாக தூத்துக்குடியில் கன மழை பெய்யும். மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என தூத்துக்குடி கலெக்டர் கூறி உள்ளார்.
4. புரெவி புயல் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் மோடி ஆலோசனை
புரெவி புயல் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
5. பிரதமர் மோடி கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் 10 க்கும் குறைவான எம்.பி.க்களை கொண்ட கட்சிகள் பேச அனுமதி இல்லை
கொரோனா மற்றும் தடுப்பூசிகள் விநியோகம் என்ற தலைப்பில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் அனைத்து கட்சி கூட்டத்தில் 10 க்கும் குறைவான எம்.பி.க்களை கொண்ட கட்சிகள் பேச அனுமதிக்கப்படாது