திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவேன் - மு.க ஸ்டாலின் + "||" + As soon as the DMK comes to power, I will try to cancel the NEET exam - MK Stalin
திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவேன் - மு.க ஸ்டாலின்
திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவேன் என மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: -நீட் தேர்வை பொருத்தவரை தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் குளறுபடி ஏற்படுகிறது.
ஆளுநரை முதல்வர் பழனிசாமி கேள்வி கேட்காவிடில் எதிர்க்கட்சித் தலைவராக நான் கேள்வி கேட்பேன். மாணவர்களுக்கு நீட் தேர்வு பலி பீடமாக உள்ளது. திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவேன்” என்றார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் ஒரு பெண் எழுப்பிய சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு திமுக அதிமுக போட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.