தேசிய செய்திகள்

காங்.ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை நடைபெற்றால் ராகுல் காந்தி ஏன் அங்கு செல்வதில்லை? நிர்மலா சீதாராமன் கேள்வி + "||" + Not a word from the tweet-friendly leader Shri Rahul Gandhi.

காங்.ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை நடைபெற்றால் ராகுல் காந்தி ஏன் அங்கு செல்வதில்லை? நிர்மலா சீதாராமன் கேள்வி

காங்.ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை நடைபெற்றால் ராகுல் காந்தி ஏன் அங்கு செல்வதில்லை? நிர்மலா சீதாராமன் கேள்வி
எந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவமும் அரசியலாக்கப்படக்கூடாது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த தொழிலாளியின் 6 வயது மகளை அதேப்பகுதியைச் சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவர் தமது தாத்தாவுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “ பீகாரை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளியின் 6-வயது மகள் ஹோசியார்பூரில்(பஞ்சாப்) பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட  சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. 

அரசியல் ரீதியாக தங்களுக்கு உதவும் வகையில்   பிற இடங்களுக்கு எல்லாம் செல்லும் சகோதரர் மற்றும் சகோதரியின் மனசாட்சியை இந்த சம்பவம் உலுக்கவில்லையா?  ராகுல் காந்தியிடம் இருந்து எந்த ஒரு டுவிட் பதிவும் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தில் எந்த கொந்தளிப்பும் ஏற்படவில்லை. எந்த சுற்றுப்பயணமும் இல்லை.  எந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவமும் அரசியலாக்கப்படக்கூடாது. தங்கள் ஆளும் மாநிலங்களில்  வன்கொடுமை நடந்தால் காங்கிரஸ் மவுனம் காக்கிறது’ என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகள்-போலீஸ் மோதல் எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது - ராகுல் காந்தி கருத்து
டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதல் குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது என குறிப்பிட்டார்.
2. தேசிய நலனை கருத்தில் கொண்டு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுங்கள: ராகுல் காந்தி
எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
3. அருணாசல பிரதேசத்தில் அத்துமீறல்: சீனாவுக்கு எதிராக பா.ஜனதா போராட்டம்
சீன அதிபர் ஜின்பிங்கின் உருவ பொம்மைகளைஎரித்து தங்கள் எதிர்ப்பை பாஜகவினர் பதிவு செய்தனர்.
4. ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு ஈரோட்டில் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்பு
ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு ஈேராட்டில் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்கிறார்.
5. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி
வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.