தேசிய செய்திகள்

வங்கியில் 2 கோடி ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை - மத்திய அரசு அறிவிப்பு + "||" + Central govt approves scheme for grant of ex-gratia payment of difference between compound interest

வங்கியில் 2 கோடி ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை - மத்திய அரசு அறிவிப்பு

வங்கியில் 2 கோடி ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை - மத்திய அரசு அறிவிப்பு
மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான வங்கியில் 2 கோடி ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டியில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,

வங்கியில் கடன் பெற்ற பயனாளிகளுக்கு 2020 மார்ச் 1 முதல் 2020 ஆகஸ்ட் 30 வரை வட்டிக்கு வட்டி வசூலிக்கும் கூட்டு வட்டி தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடன் தவணையை செலுத்த சலுகை அறிவிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்கும், வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முறையை தள்ளுபடி செய்யக் கோரிய வழக்கில், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டபடி, கூட்டு வட்டி தள்ளுபடி செய்யப்படுவது தொடர்பான அறிவிப்பை இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரூ.2 கோடி வரை கடன் பெற்றவா்கள் பயன்பெறுவார்கள்.

ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அனைத்து தேசிய வங்ககளில் கடன் பெற்றவர்களுக்கும் கடன் மீதான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.

சிறு, குறு, தொழில் கடன், கல்விக் கடன், வீட்டுக் கடன், தனிநபர் கடன், கிரெடிட் அட்டை கடன், வாகனக் கடன் பெற்ற பயனாளர்களுக்கு இந்த ஆறு மாதங்களுக்கும் கடன் தவணையில் வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.

அதேவேளையில், கடன் தவணையை செலுத்த சலுகை வழங்கப்பட்ட தள்ளி வைப்பு காலத்தில் முறையாக கடன் தவணை செலுத்தியவர்களுக்கு, அவர்கள் செலுத்திய வட்டிக்கு வட்டித் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு (கேஷ்பேக்) வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் மாத தவணை செலுத்துவதில் விலக்கு பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதித்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து வட்டிக்கு வட்டியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது.