மாநில செய்திகள்

பெண்களை போற்றவேண்டுமே தவிர, தூற்றக்கூடாது, திருமாவளவன் கூறியது கண்டிக்கத்தக்கது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி + "||" + Thirumavalavan's statement is reprehensible - Minister Jayakumar

பெண்களை போற்றவேண்டுமே தவிர, தூற்றக்கூடாது, திருமாவளவன் கூறியது கண்டிக்கத்தக்கது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பெண்களை போற்றவேண்டுமே தவிர, தூற்றக்கூடாது, திருமாவளவன் கூறியது கண்டிக்கத்தக்கது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில், காழ்ப்புணர்ச்சி காரணமாகவே திமுக நாடகம் ஆடி வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை,

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பெண்களை போற்றவேண்டுமே தவிர, தூற்றக்கூடாது, திருமாவளவன் கூறியது கண்டிக்கத்தக்கது. சமுதாயத்தில் பெண்களின் பங்கு காலங்காலமாக இருந்து வருகிறது. திருமாவளவன் புகாருக்கு முகாந்திரம் இருந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். 

முதலமைச்சர் அரசு பள்ளியில் படித்தவர் என்பதால் அரசு பள்ளி மாணவர்களின் கஷ்டம் முதலமைச்சருக்கு தெரியும். உள் ஒதுக்கீடு குறித்து திமுக பேசியது இல்லை, யோசனை கூறவும் இல்லை. அதிமுக அரசின் யோசனையில் வந்த சட்டம் இது. 

7.5% இட ஓதுக்கீட்டுக்கு ஒப்புதல் கிடைக்கும் என்று தெரிந்துதான் ஸ்டாலின் அரசியல் செய்கிறார். 7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில், காழ்ப்புணர்ச்சி காரணமாகவே திமுக நாடகம் ஆடி வருகிறது.

7.5% உள் ஒதுக்கீட்டில் அதிமுக அரசுக்கு நற்பெயர் வந்தவிடக்கூடாது என்ற காழ்புணர்வுடன் செயல்படுகிறது. ஆளுநர் பதவியை விமர்சிக்கும் திமுக, மத்தியில் ஆட்சியில் இருந்தபோது ஏன் அப்பதவியை ஒழிக்கவில்லை? ஆளுநர் பதவி தேவையில்லை என்பது அதிமுகவின் கொள்கை அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.