மாநில செய்திகள்

தந்தை பெரியார் இது போன்ற கருத்துக்களைத் பேசினார்: திருமாவளவன் பேசியது எப்படி குற்றமாகும்? - ப.சிதம்பரம் கேள்வி + "||" + How is it a crime that Thirumavalavan spoke? P. Chidambaram question

தந்தை பெரியார் இது போன்ற கருத்துக்களைத் பேசினார்: திருமாவளவன் பேசியது எப்படி குற்றமாகும்? - ப.சிதம்பரம் கேள்வி

தந்தை பெரியார் இது போன்ற கருத்துக்களைத் பேசினார்: திருமாவளவன் பேசியது எப்படி குற்றமாகும்? -  ப.சிதம்பரம் கேள்வி
பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள் தோறும் நினைவு படுத்த வேண்டுமா? என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,

சென்னையில் ஒரு தனியார் யு-டியூப் சேனல் சார்பாக  ஒரு மாதத்துக்கு முன்பு இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் பங்கேற்று மனுதர்மம் குறித்து பேசியது சர்ச்சையானது.

இந்நிலையில் எம்.பி திருமாவளவன் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக இந்து இயக்கத்தினரும், பாரதிய ஜனதா உள்ளிட்ட சில கட்சிகளும் குற்றம்சாட்டி வந்தன. இதனைத் தொடர்ந்து அவர் மீது 6 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம்  டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தந்தை பெரியார் பற்றிய கருத்தரங்கில் நண்பர் திரு திருமாவளவன் ஆற்றிய உரை (குற்றவியல்) குற்றம் என்று காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. பேசிய பொருள் ஏற்படையதா இல்லையா என்பது பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அது எப்படி (குற்றவியல்) குற்றம் ஆகும்? பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள் தோறும் நினைவு படுத்த வேண்டுமா?  இது போன்ற கருத்துக்களைத் தந்தை பெரியார் பேசினார். இன்று அவர் பேசியிருந்தால் காவல் துறை என்ன செய்திருப்பார்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார்.