டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 194 ரன்கள் குவித்துள்ளது.
அபுதாபி,
துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 42வது ஆட்டத்தில் இயன் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் அபுதாபியில் உள்ள ஷேக் சாயீத் மைதானத்தில் நடக்கிறது.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் நிதிஷ் ரானா களமிறங்கினர். ஷுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், நிதிஷ் ரானா 53 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 81 ரன்கள் குவித்தார்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிர்கு 194 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 195 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி தற்போது விளையாடி வருகிறது.