தேசிய செய்திகள்

வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு + "||" + Income tax return filing deadline for FY20 extended till December 31

வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
2019-20 நிதியாண்டிற்கான தனிநபர் வரி செலுத்துவோர் வருமானத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

ஆண்டுக்கு, ரூ.2½ லட்சம் உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது, 2018-ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது.

அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், மார்ச் 31-ந் தேதி உடன் முடிவடைந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக, அக்டோபர் 31-ம் தேதி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 2019-20 நிதியாண்டிற்கான தனிநபர் வரி செலுத்துவோர் வருமானத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டிய வரி செலுத்துவோருக்கு, வருமான வரி வருமானம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 2021 ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.