மாநில செய்திகள்

அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் - அரசாணை வெளியீடு + "||" + Government offices now operate only 5 days a week

அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் - அரசாணை வெளியீடு

அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் - அரசாணை வெளியீடு
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமை உள்பட வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அது மாற்றப்பட்டு, அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என்று புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், கொரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது மாற்றப்பட்டு 100 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.