ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக போராட்டம் நடத்திய விவகாரம்: ஸ்டாலின் மற்றும் போராட்டத்தில் பங்கேற்ற 3500 பேர் மீது வழக்குப்பதிவு + "||" + Prosecution of Stalin and 3500 people who took part in the struggle
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக போராட்டம் நடத்திய விவகாரம்: ஸ்டாலின் மற்றும் போராட்டத்தில் பங்கேற்ற 3500 பேர் மீது வழக்குப்பதிவு
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக போராட்டம் நடத்திய விவகாரத்தில் ஸ்டாலின் மற்றும் போராட்டத்தில் பங்கேற்ற 3500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆளுநரையும் தமிழக முதலமைச்சரையும் கண்டித்து சின்னமலை ராஜீவ் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் தி.மு.க பொருளாளர், டி.ஆர்.பாலு, எம்.பி. கனிமொழி, எம்.எல்.ஏகள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியம், இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம் என 4,000-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் இதில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக போராட்டம் நடத்திய விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் போராட்டத்தில் பங்கேற்ற 3500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிண்டி காவல்நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.